வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

 

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

 அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதி  மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்புக்காகக் காவலர்கள்  குவிக்கப்பட்டுள்ளனர்.

ttn

அதிமுக சார்பில் காலை சுமார் 9.30 மணிக்கு  அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள். அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இதேபோல்  அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. 

ttn

இந்நிலையில் சென்னையில் இன்று போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஜெயலலிதா நினைவிடத்தின் வடக்கிலிருந்து வரும் வாகனங்கள், போர் நினைவுச்சின்னம் சந்திப்பிலிருந்து கொடிமரச் சாலை, அண்ணா சாலை வழியே செல்ல வேண்டும் என்றும் முத்துசாமி பாயின்டிலிருந்து வரும் வாகனங்கள், கொடிமரச் சாலைக்கு செல்லாமல் அண்ணா சாலை  வழியாகவும், நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆடம்ஸ் பாயின்டில் திருப்பப்பட்டு சுவாமி சிவானந்த சாலை வழியே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பிலும் செல்லவேண்டும் என்று  சென்னை போக்குவரத்து காவல்துறை  தெரிவித்துள்ளது.