வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து 15,16 ஆம் தேதிகளில் முடிவெடுக்கப்படும்!

 

வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து 15,16 ஆம் தேதிகளில் முடிவெடுக்கப்படும்!

கடந்த 7 ஆம் தேதி 33 சதவீத பணியாளர்களுடன் கோவில்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியவுடன் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை முடக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன் படி மால்கள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களும் வைபவங்களும் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 40 நாட்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த 7 ஆம் தேதி 33 சதவீத பணியாளர்களுடன் கோவில்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், டாஸ்மாக்குகளுக்கு அனுமதி அளித்த அரசு ஏன் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து வரும் மே மாதம் 15 அல்லது 16 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசார்ணையை 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.