வழக்கு தொடர்ந்தது நான்… பெயரைத் தட்டிச் செல்வது கமல்ஹாசனா? – வழக்கறிஞர் கொந்தளிப்பு

 

வழக்கு தொடர்ந்தது நான்… பெயரைத் தட்டிச் செல்வது கமல்ஹாசனா? – வழக்கறிஞர் கொந்தளிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவைப் பெற்றது நான், ஆனால் நடிகர் கமல் ஹாசன் எப்படி இதற்கு உரிமை கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை என்று வழக்கறிஞர் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவைப் பெற்றது நான், ஆனால் நடிகர் கமல் ஹாசன் எப்படி இதற்கு உரிமை கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை என்று வழக்கறிஞர் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு முடிவதற்கு முன்பு டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவ செய்திருந்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகள் விதித்து கடை திறக்க தடை இல்லை என்று அறிவித்தது.

kamalapuram

ஆனால், டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளிலேயே நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. பல கி.மீ தூரத்துக்கு வரிசையில் நின்று குடிமகன்கள் மது பாட்டில் வாங்கிச் சென்றனர். இதனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் அவற்றை மூட உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் நீதிமன்றத்தை நாடினார். அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை விதித்து உத்தரவிட்டது. தாங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு கிடைத்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார். எல்லா ஊடகங்களிலும் கமல் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு என்றும், டாஸ்மாக் கடையை மூட வைத்த கமல் என்றும் செய்தி வெளியிட்டனர்.

kamalhassan-67

இந்த நிலையில் டாஸ்மாக் கடை தன்னுடைய மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைக் குறிப்பிட்டு வழக்கறிஞர் ராஜேஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “டாஸ்மாக் தன்னுடைய மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் என்னுடைய வழக்கு எண்ணை மேற்கோள்காட்டியுள்ளனர். நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய மனு அடிப்படையில் தீர்ப்பு கிடைத்ததாக கூறியதைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். நாம் அனைவரும் கடையை மூட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயல்படுகிறோம். மற்ற விஷயங்களில் இனி கவனம் செலுத்துவோம். 

டாஸ்மாக் கடிதத்தில் மற்றொரு வழக்கு எண் உள்ளது அது கமல் ஹாசனால் தாக்கல் செய்யப்பட்டது என்று கருதிவிட வேண்டாம். இந்த மனுவை வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் அடிப்படையில் பொதுவான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “நாங்களும் மனு தாக்கல் செய்திருந்தோம். அந்த மனு அடிப்படையிலும்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு எங்களைத் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யும் வகையில் வழக்கு எண்ணை மறைத்துள்ளது” என்றனர்.