வளைய சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ணலாமா?

 

வளைய சூரிய கிரகணத்தின் போது  உணவு உண்ணலாமா?

சூரிய கிரகணமே தெரியும் என்றும் கோவை, ஈரோடு , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8.07 மணி முதல் 11.18 மணி வரை, மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வளைய சூரிய கிரகணம்  நிகழ்கிறது. இந்த நெருப்புவளைய சூரிய கிரகணமானது  சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலான சூரிய கிரகணமே தெரியும் என்றும் கோவை, ஈரோடு , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

குறிப்பாக  காங்கேயம், ஊட்டி, அவிநாசி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் 3 நிமிடங்கள் வரை இந்த நெருப்புவளைய சூரிய கிரகணமானது தெரியுமாம். அதேபோல் சிவகங்கை மற்றும் காரைக்குடியில் 2 நிமிடங்களும்,  திண்டுக்கல்லில் 2.50 நிமிடங்களும், கோவை, ஈரோட்டில் 1 நிமிடம் 24 வினாடிகள் வரை இந்த கிரகணம் தெரியக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

ttn

இந்நிலையில் சூரிய கிரகணத்தின்போது, கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது, கிரகண காலத்தில் உணவு அருந்தக் கூடாது என்று நம்பப்படுகிறது.ஆனால் இது முற்றிலும் தவறானது என்றும் வழக்கமான நாட்களைப் போல இன்றும் உணவு அருந்தலாம், வெளியில் செல்லலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.