வளைகுடா நாடுகளிலிருந்து கேரளா வந்த மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 52 ஆக உயர்வு!!

 

வளைகுடா நாடுகளிலிருந்து கேரளா வந்த மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 52 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏற்கனவே 40  பேருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக கேரளாவில் பாதித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது. அதனொரு பகுதியாக அரசு ஊழியர்களை 2 வாரங்களுக்கு பகுதிநேர வேலை செய்ய கேரளா அறிவுறுத்தி உள்ளது.

Pinarayi Vijayan

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 பேரும் அரபு நாடுகளிலிருந்து கேரளா வந்தது தெரியவந்துள்ளது.3 பேர் கண்ணூரிலும், காசராகோடு பகுதியில் 6 பேரும், எர்ணாகுளத்தில் 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 12 பேரும் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்பியுள்ளனர்