வளர்ச்சியா அடுத்த வருஷம் பார்க்கலாம்….. இப்பம் 5.6 சதவீதம்தான் இருக்கும்…. மூடிஸ் கணிப்பு

 

வளர்ச்சியா அடுத்த வருஷம் பார்க்கலாம்….. இப்பம் 5.6 சதவீதம்தான் இருக்கும்…. மூடிஸ் கணிப்பு

மூடிஸ் நிறுவனம் தற்போது இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 5.6 சதவீதமாக குறைத்துள்ளது. அதேசமயம் அடுத்த ஆண்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என தெரிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மறுமதிப்பீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த (2019) ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.6 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி ஏற்படும் என கணக்கிட்டுள்ளது. முதலில் அந்நிறுவனம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.8 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்து இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

2018ம் ஆண்டின் மத்தியலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வீழ்ந்தது. மேலும் வேலைவாய்ப்பு இல்லாமையும் அதிகரித்து வருகிறது. 

மோடியின் பொருளாதார கனவு

இருப்பினும் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் வேகம் எடுக்கும். அந்த ஆண்டுகளில் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி முறையே 6.6 மற்றும் 6.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த அளவில் சென்றால், 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார பலத்தை 5 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) என்ற மத்திய அரசின் லட்சிய கனவு வெறும் கனவாகவே மாறி விடும்.