வல்லபாய் படேலுக்கு போட்டியா உருவாகும் பிரமாண்ட சிவன் சிலை!

வல்லபாய் படேலுக்கு போட்டியா உருவாகும் பிரமாண்ட சிவன் சிலை!

ராஜஸ்தானில் 351 அடி உயர சிவன் சிலை தற்போது உருவாகி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி 6 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் பணி முற்றிலும் நிறைவடையும் என கூறப்படுகிறது. 

ss

உலகிலேயே மிகவும் உயரமான சிவன் சிலை என்ற பெருமையுடன், நதட்வாரா என்ற பகுதியில் பிரமாண்ட சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. உதய்ப்பூர் நகரில் 50 கிமீ தொலைவில் இந்த சிலை அமைந்துள்ளது. 351 அடி உயரத்தில் 2,500 டன் ஸ்டீல் கொண்டு சுமார் 75 பணியாளர்கள் இந்த சிலையை உருவாக்கி வருகின்றனர். குஜராத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலைக்கு போட்டியாக இச்சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.  20 அடி உயரத்தில் 3 பார்வை மாடங்கள், லிஃப்ட் என பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.  இதேபோன்று ஐதராபாத்திலும் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 

uu

சர்தார் வல்லபாய் சிலை எழுப்பியதற்கே பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சிலையால் என்ன பலன் கிடைக்கப்போகிறது. அந்த தொகையை வேறு ஏதாவது திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரமாண்ட சிவன் சிலையை பாஜக எழுப்பிவருகிறது.