வலுவடைகிறது பருவமழை!  30,31ம் தேதி கனமழைக்கு எச்சரிக்கை! 

வலுவடைகிறது பருவமழை!  30,31ம் தேதி கனமழைக்கு எச்சரிக்கை! 

பருவமழை வலுவடைந்துள்ளதை அடுத்து சென்னையில் இன்று அதிகாலை நான்கு மணிக்கு துவங்கி அடுத்து சுமார் 40 நிமிடங்கள் வரையில் பல இடங்களில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. தற்போது நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

rain

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு 30,31 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மாலையும் தமிழகத்தின் பல பகுதிகளிலும், கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மாலை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவுப் பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.