வலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு ஒரு சட்டமா?கருணாஸ் கேள்வி

 

வலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு ஒரு சட்டமா?கருணாஸ் கேள்வி

வலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு ஒரு சட்டமா? என எம்.எல்.ஏ கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: வலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு ஒரு சட்டமா? என எம்.எல்.ஏ கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சமீபத்தில் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து தரக்குறைவாக பேசியதால் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டை தெரிவித்தனர். அதேசமயம், கருணாஸை கைது செய்தது போல்,  காவல்துறையையும், உயர் நீதிமன்றத்தையும் மிகவும் கீழ்த்தரமாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. மேலும் இதன்மூலம் பாஜகவுக்கு தமிழக அரசு அடி பணிந்துதான் போகிறது எனவும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்திருக்கும் கருணாஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், நான் லொடுக்கு பாண்டிதான். கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். கண்டிக்கிறோன் என போஸ்டர் ஒட்டினால் வழக்கு போடுகிறார்கள். வலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு ஒரு சட்டமா? என அவர் கேள்வி எழுப்பினார்.