வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்: அதிர்ச்சியில் படக்குழு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

 

வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்: அதிர்ச்சியில் படக்குழு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. 

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார்.  தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. 

 

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோடில் நடைபெற்று வருகிறது. இதற்கான புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

வலிமை படத்தை பொறுத்தவரையில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. படக்குழு வலிமைப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் உளது ரசிகர்களுக்குச் சோகத்தைத் தந்துள்ளது. இருப்பினும் முதல் முறையாக வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியும், ரசிகர்கள் உற்சாகமும் அடைந்துள்ளனர்.