வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட காயம்: டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க் காட்சியில் நடித்ததால் விபரீதம்!?

 

வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட காயம்:  டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க் காட்சியில் நடித்ததால் விபரீதம்!?

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பமாகவுள்ளது. வலிமை திரைப்படம்  தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார்.  தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.  இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

 

வலிமை படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காகப்  படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வதில்லை இதனால் இயக்குநர் சோகத்தில் இருக்கிறார் என்று ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது. 

ttn

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் பெரிய அளவில் காயம் இல்லாததால்  சென்னையில் நடந்த படப்பிடிப்பு முழுவதையும் அஜித் முடித்து கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் #GetWellSoonTHALA என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ttn

வலிமையின் அடுத்தகட்ட படப்பிடிப்பு   மார்ச் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பமாகவுள்ளது. வலிமை திரைப்படம்  தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.