‘வலிமை’யில் அஜித்துடன் இணைந்த பாலிவுட் நடிகை யாமி கௌதம்

 

‘வலிமை’யில் அஜித்துடன் இணைந்த பாலிவுட் நடிகை யாமி கௌதம்

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

ttn

இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கார் சேசிங் காட்சிகளை  அமைத்து கொடுத்த  ஹாலிவுட் கலைஞர் ஹென் கோலின்ஸ்  என்பவரைப் படக்குழு  அணுகியுள்ளதாம். 

இந்நிலையில் வலிமை  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்  தொடங்கியது. இதில் அஜித்துக்கு  ஜோடியாக யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது இப்படத்தில் பாலிவுட்  நடிகை யாமி கௌதம் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் ஜெய்  நடித்த தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.