வற்றாத செல்வங்களைக் கொடுக்கும் ஆடி வெள்ளி வழிபாடு!

 

வற்றாத செல்வங்களைக் கொடுக்கும் ஆடி வெள்ளி வழிபாடு!

இன்று ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை. பொதுவா வெள்ளிக்கிழமை என்றாலே மங்களகரமான நாள். அம்மனுக்கு உகந்த நாள்.

இன்று ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை. பொதுவா வெள்ளிக்கிழமை என்றாலே மங்களகரமான நாள். அம்மனுக்கு உகந்த நாள். அதிலும், அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமை மேலும் மங்களகரமானது. அதனால் இன்றைய நாளில்  அம்மனை மனதார வழிபட்டால் வாழ்வில் மங்களமாய் வாழ அனைத்து செளபாக்கியங்களையும் அள்ளித் தருவாள்.  

“தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே” 

என்று அபிராமி பட்டரும் அம்மனைக் கொண்டாடுகிறார்.  வெள்ளிக்கிழமைகளில் இருக்கும் விரத்ததை சுக்ர வார விரதம் என்கிறோம்.  ஆனால், இந்த ஆடி மாதம் முழுவதுமே அகிலத்தைக் காக்கும் சிவபெருமான் சக்திக்குள் ஐக்கியமாகி இருப்பார் என்பது ஐதீகம். அதனால், அம்பிகையின் சக்தியும் பல மடங்கு அதிகரிக்கும். அதனால் தான் ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோயில்கள் அனைத்திலும் பூஜைகளையும், அபிஷேக ஆராதனைகளையும் நடத்துகிறோம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடக்கும். அன்றைய தினம் அழகான அம்மன் மேலும் அலங்கரிக்கப்பட்டு அழகு தேவதையாக பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் புரிவாள். 

kuthuvilaku

ஆடி வெள்ளிக்கி்ழமையில்  அதிகாலை எழுந்து வாசலில் கோலமிட்டு, வேப்பிலைக் கொத்துகளை வாசல்படியில் தொங்கவிட வேண்டும். வீட்டின் பூஜையறையில் மகாலஷ்மியின் படத்தை வைத்து,  குத்துவிளக்கை அலங்கரித்து ஐந்துமுக விளக்கேற்ற வேண்டும்.  அம்மனை வழிபடும் போது அம்மன் பாடல்கள், மந்திரங்கள், லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். நைவேத்யத்துக்கு சர்க்கரை பொங்கலும், பால் பாயசமும் வைத்து பிரசாதமாக விநியோகிக்க வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலை, பாக்கு, பழத்துடன் ரவிக்கை, கண்ணாடி வளையல், குங்குமம் வைத்து கொடுப்பது கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் மங்களத்தைக் கொடுக்கும். இன்று மகாலஷ்மி வீடு தேடி வருவாள்.  

lakshimi

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியின் வழிபாடு வற்றாத செல்வத்தை அள்ளித் தரும். குடும்பங்களின் நன்மைக்காக அம்பிகை, அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி, ஆதிபராசக்திகளை வணங்கி வழிபாடு செய்து பலனை அடையலாம். எட்டு லட்சுமிகளான அஷ்ட லட்சுமிகளின் அருளை சேர்த்து பெறுவதற்கு உகந்த நாளாக ஆடி வெள்ளிக்கிழமையைச் சொல்கிறோம்.  இன்று நாக தேவதைக்கும் சிறப்பு பூஜை செய்யக்கூடிய காலம். ஆடி மாத, ஆடி வெள்ளி என்பதால் புற்றுக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். ஆடி வெள்ளிக்கிழமையில் துர்க்கையம்மன் வழிபட்டால், தடங்கலின்றி அவள் அருளை பெறலாம். திருமணத்தடை இருக்கும் கன்னிப்பெண்கள், இன்றைய தினத்தில் ராகுகாலத்தில் துர்க்கையம்மனை வேண்டி எலுமிச்சை விளக்கேற்றினால் நல்ல கணவனை வாய்க்கும் பேறு பெறுவார்கள். 

amman

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில்,108 அல்லது 1008 எண்ணிக்கையில் குத்துவிளக்கு பூஜை நடைபெறும். குத்துவிளக்கு பூஜையின் போது, நவசக்தி அர்ச்சனை விசேஷமிக்கது. 
நவசக்தி என்பது பராசக்தியின் சர்வ பூதக மணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரவுத்திரி, கேட்டை, வாமை என ஒன்பது அம்சங்களைக் குறிக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து இருக்கும் பெண்கள், ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தால், தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும். திருமணம் கைகூடாத பெண்களும், மாங்கல்ய பலம் வேண்டியும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், செல்வம் கொழிக்கவும் ஆடி வெள்ளி வழிபாடு பெண்களுக்கு முக்கியமான நாள். ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால், கேட்ட அனைத்தையும் மனமுவந்து மகிழ்வோடு வழங்குவாள் அம்பிகை.