வறுமை நிலையில் பிளஸ்2 தேர்வில் சாதித்த மாணவி வீட்டுக்கு கிடைத்த வசதி!

 

வறுமை நிலையில் பிளஸ்2 தேர்வில் சாதித்த மாணவி வீட்டுக்கு கிடைத்த வசதி!

கடந்த மார்ச் 1-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 19-ம் தேதி முடிவடைந்தது

தஞ்சை: மின் வசதியின்றி பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் வீட்டில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 1-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 19-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதியான வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தலை முன்னிட்டு தேர்வு முடிவுகள் தாமதமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் விடைத்தாள்  திருத்தும் பணி விரைவாக முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள், 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

students

இந்தத் தேர்வில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 5.07 சதவிகிதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் அதிகமாக தேர்ச்சியடைந்தவர்கள் என்ற ரீதியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

solar light

இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த ஏழை மாணவி சஹானா, தனது வீட்டில் மின்வசதியின்றி படித்து 600-க்கு 524 மதிப்பெண்கள் பெற்றார். மின்வசதி இல்லாமல் படித்து சாதித்த மாணவி சஹானா குறித்து ஊடகங்களில் செய்தி வந்ததையடுத்து, தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் மாணவி சஹானாவின் வீட்டில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.