வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு ரூ.10,000 தர வேண்டும் என மோடியிடம் கூறினேன் – டி.ஆர். பாலு

 

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு ரூ.10,000 தர வேண்டும் என மோடியிடம் கூறினேன் – டி.ஆர். பாலு

கொரோனா பாதிப்பைத் தவிர்க்க கடந்த மார்ச் 24ம் தேதி 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காத நிலையில், இன்னும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. இந்நிலையில்  அனைத்து மாநில முதல்வர்களின் கருத்துக்களைக் கேட்க உள்ளார் மோடி. ஏப்ரல் 11ம் தேதி மாநில முதல்வர்களுடனான வீடியோ கான்ஃபரன்சிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மோடி

பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்ற பின் டி.ஆர். பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக பணியாற்ற கோரினேன். ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தினேன், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நடுத்தர மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக தர கோரினேன்” எனக் கூறினார்.