வறுத்த வடச்சட்டி கறி சோறு! கொங்கு ஸ்பெஷல் ரெசிப்பி

 

வறுத்த வடச்சட்டி கறி சோறு! கொங்கு ஸ்பெஷல் ரெசிப்பி

முதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்,இவன் ஒரு டேஞ்சரஸ் ஃபெல்லோ,கொலஸ்ட்ரால் கூடியவர்களும்,பெருசுகளும் கண்டுக்காமல் போய் விடுங்கள்.இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு மட்டுமான ரெசிப்பி!

முதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்,இவன் ஒரு டேஞ்சரஸ் ஃபெல்லோ,கொலஸ்ட்ரால் கூடியவர்களும்,பெருசுகளும் கண்டுக்காமல் போய் விடுங்கள்.இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு மட்டுமான ரெசிப்பி!

இது ஒரு கொங்கு ஸ்பெஷல் வில்லேஜ் பிரியாணி என்று ஒரு வசதிக்காக சொல்லிக்கொள்ளலாம்.கொஞ்சம் பொறுமை இருந்தால் இந்த வாயூறும்.டிஷை செய்து மூக்குப்பிடிக்க சாப்பிடலாம்

தேவையான பொருட்கள்

வெள்ளாட்டு முன்னங்கால் தொடைக்கறி – 500 கிராம்
பிரியாணி இலை அல்லது ரம்பை இலை -1
பட்டை – 2 இஞ்ச் 
இஞ்சி – 1 இஞ்ச் 
பூண்டு – 6 பல் 
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய் – 4
தக்காளி – 1
(இஞ்சி,பூண்டு,சி.வெங்காயம்,பெ.வெங்காயம் பச்சை மிளகாய் ,தக்காளி அனைத்தையும் பொடிப்பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும்)
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தூள் – 1மேஜைக் கரண்டி
தனி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் ½ தேக்கரண்டி
சோம்புத்தூள் ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
மரசெக்கு கடலை எண்ணை ஒரு குழிக்கரண்டி.
பசுமாட்டு வெண்ணை 2 மேஜைக்கரண்டி
சமைத்த சோறு 3 கப்
உப்பு தேவையான அளவு.

வறுத்து அரைக்க

மிளகு 1 தேக்கரண்டி
தேங்காய் துறுவல் ½ கப்

தாளிக்க

பொடியாக வெட்டிய தேங்காய் துணுக்குகள் ½ கப்
கடுகு ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு ஈற்க்கு

ஸ்டெப் – 1

கறியை சுத்தமாக கழுவி மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து ½ கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 4 விசில் விட்டு எடுத்து வித்துக்கொள்ளுங்கள்

ஸ்டெப் – 2

தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து ,ஆறவைத்து,அத்துடன் மிளகைச்சேர்த்து தண்ணீர் விடாமல் மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும்

ஸ்டெப் – 3

இப்போது , ஒரு இரும்பு வடச்சட்டியை ( வானலி) அடுப்பிலேற்றி,கடலெண்ணை ஊற்றி,எண்ணை சூடானதும் பிரிஞ்சி இலை,மராட்டி மொக்கு,லவங்கம்,பட்டை சேர்த்து லேசாக வதக்குங்கள்,இதில் வெட்டி வைத்திருக்கும்,இஞ்சி,பூண்டு,சிறிய வெங்காயம்,பெரிய வெங்காயம்,பச்சை மிள்காய் இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடம் வரை பொறுமையாக வதக்குங்கள்.

ஸ்டெப் – 4

இப்போது, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கரம் மசாலா தூள்,சோம்புத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு எண்ணை பிரியும் வரை வதக்க வேண்டும்

ஸ்டெப் – 5

குக்கரில் வெந்து தயாராக இருக்கும் கறியை மட்டும் எடுத்து வடச்சட்டியில்  வெந்துகொண்டு இருக்கும் மசாலாவில் போட்டு கிளறி விடுங்கள். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மிளகு கலவையைச் சேருங்கள், பொடியாக வெட்டிய தக்காளியையும் சேருங்கள். குக்கரில் இருக்கும் மட்டன் வெந்த தண்ணீரையும் சேருங்கள். உப்பை சரிபார்த்து ஒரு தட்டைப் போட்டு மூடி 10 நிமிடம் சிறு தீயில் வேகவிடுங்கள்.குழம்பு கெட்டியாகும் நேரத்தில் பசுமாட்டு வெண்ணையை சேர்த்து நன்றாக சிவக்க கிளறவும்.

ஸ்டெப் – 6

இப்போது, வேறு ஒரு அடுப்பில் ஒரு சிறு கடாயை வையுங்கள். அதில் மரச்செக்கு கடலெண்ணை விடுங்கள்.எண்ணை சூடானதும்,கடுகு , கறிவேப்பிலை சேருங்கள்
பிறகு பொடியாக வெட்டிய தேங்காய் துணுக்குகள்,வெங்காய சேர்த்து வதக்குங்கள்,வெங்காயம்,தேங்காய் இரண்டும் பொன்னிறமாகும் வரை வதக்கி அதைத்தூக்கி கறி வெந்துகொண்டு இருக்கும் வடச்சட்டியில் கொட்டி மறுபடியும் கிளறுங்கள்.

ஸ்டெப் – 7

இப்போது,தயாராக இருக்கும் சோற்றை எடுத்து ஒரு கப் சோறு,ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கிளறுங்கள்.அப்புறம் இன்னொரு கப் சோறு , வெண்ணை, மறுபடி கிளறுங்கள்.இப்போது மீதமுள்ள சோறு வெண்ணை எல்லாவற்றையும் போட்டு இன்னொரு தடவை கிளறுங்கள்.

ஸ்டெப் – 8

அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக வதக்குங்கள்,சோறு ஃபிரை ஆக,ஆக சுவை கூடும்.இப்போது,அடுப்பை அனைத்து விட்டு,கொலஸ்ட்ரால் பார்ட்டிகள்,பெருசுகள் கண்ணில் காட்டி , அவர்களை தற்கொலைக்குத் தூண்டாமல் நல்ல பிள்ளைகளாக சாப்பிட்டுக் கொண்டாடுங்கள்.

இதையும் படிங்க: குமாரபாளையம் ‘அம்மன் மெஸ்’ போறீங்களா! அந்த ரசத்தையும் குல்கந்தையும் மறக்கவே மாட்டிங்க!