வறண்ட கிணற்றில் விழுந்து 2 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பிய மூதாட்டி!

 

வறண்ட கிணற்றில் விழுந்து 2 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பிய மூதாட்டி!

ஆடு மேய்க்கும் ஒருவர் கிராம அலுவலருக்கு தகவல் கொடுக்க, அந்த இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.

சேலம் : கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது கணவர் இறந்து விட தனிமையிலிருந்த வந்த வள்ளியம்மாள் அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டது போல நடந்து கொள்வாராம்.  இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக வள்ளியம்மாள் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.

well

இதையடுத்து அப்பகுதியில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட வறண்ட கிணற்றில் மூதாட்டி ஒருவர் விழுந்து தவித்து வருவதாக அப்பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் கிராம அலுவலருக்கு தகவல் கொடுக்க, அந்த இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்பு அப்போது தான் அது காணாமல் போன வள்ளியம்மாள் என்பது தெரியவந்தது.

well

இதை தொடர்ந்து கயிறு மூலம் வள்ளியம்மாளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். லேசான காயங்களுடன் உயிர்பிழைத்த வள்ளியம்மாளை  அங்குள்ள ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர். இரண்டு நாட்களாக கிணற்றில் விழுந்த தவித்து வந்த மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டதால் அப்பகுதிவாசிகள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.