வறட்டு இருமலை நிமிஷத்துல சரியாக்கிடும் வீட்டு வைத்தியம்

 

வறட்டு இருமலை நிமிஷத்துல சரியாக்கிடும் வீட்டு வைத்தியம்

தலைவலியைக் கூட சமாளித்து விடலாம். சளி இருந்தாலும் பரவாயில்லை. இந்த வறட்டு இருமல் படுத்தும் பாடு பெரிய இம்சை தான். இருமும் போது தொண்டை முழுவதும் ஒரு ரணத்தை ஏற்படுத்தி, இரு நிமிடங்களுக்கு ஒருமுறை அக்கம் பக்கம் நின்றுக் கொண்டிருப்பவர்களையும் கலவரப்படுத்தி பெரிய இம்சையாக இருக்கும். படுத்தால் உடனே இருமல் வரும். அதற்காக எப்பொழுதும் நின்று கொண்டேவா இருக்க முடியும்.

தலைவலியைக் கூட சமாளித்து விடலாம். சளி இருந்தாலும் பரவாயில்லை. இந்த வறட்டு இருமல் படுத்தும் பாடு பெரிய இம்சை தான். இருமும் போது தொண்டை முழுவதும் ஒரு ரணத்தை ஏற்படுத்தி, இரு நிமிடங்களுக்கு ஒருமுறை அக்கம் பக்கம் நின்றுக் கொண்டிருப்பவர்களையும் கலவரப்படுத்தி பெரிய இம்சையாக இருக்கும். படுத்தால் உடனே இருமல் வரும். அதற்காக எப்பொழுதும் நின்று கொண்டேவா இருக்க முடியும். எப்போது ஒரு முறை இருமும் போது வருகிற சளியை விட, ஒவ்வொரு முறையும் இருமும் போது ஏற்படுகிற ரணம் இன்னும் கொடூரம்.

cough

வறட்டு இருமல் பெரும்பாலும் தொண்டையில் சிறு சிறு கொப்புளங்கள், புண்கள், போன்றவற்றாலும், அசுத்தங்களினாலும், தூசுகளினாலும், ஒவ்வாமையினாலும் வருகிறது. நாம் இரும்பி இரும்பி தொண்டையின் உள் பாகத்தில் இருக்கும் பகுதிகளில் இன்னும் சிறு சிறு புண்களை உருவாக்கிக் கொள்கிறோம். நாம் பேசும் போது வெளிக்காற்று உள்ளே போய் அந்தப் புண்ணின் மீது பட்டு ஒரு வித நெருடலை உருவாக்கி இருமல் வருகிறது.

இருமல், சளி போன்றவை இருக்கும் சமயங்களில், இனிப்பு சுவை உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து விடவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, கொஞ்சம் வெதுவெதுப்பாக குடிக்கவும். கூடுமானவரை வெந்நீரில் உப்பு கலந்து, அந்த நீரினால் அடிக்கடி வாய் கொப்பளித்து வரவும். வாய் கொப்பளிக்கும் போது, அந்த உப்பு கலந்த நீர் உங்கள் தொண்டையை நனைக்கும்படி பார்த்துக் கொண்டால் தொண்டைப்புண்கள் சரியாகும். 

cough

குப்பைமேனி இலை 1 கைப்பிடி, முருங்கையிலை 1 கைப்பிடி, கல் உப்பு 1 டீஸ்பூன் இவை மூன்றையும் உள்ளங்கையில் வைத்து, கசக்கி சாறு எடுத்து குழைத்து வெளிப் புறத்தில் தொண்டையில் முழுவதும் போட்டு விடவும். வறட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் உடனடியாக சரியாகிவிடும்.  இது தவிர உள்ளுக்கு பசும்பால் 200மி.லி. காய்ச்சி அதில் சுக்கை(கட்டை விரல் அளவு)   நசுக்கிப்  போட்டு கொதி வந்ததும் 1டீஸ்பூன் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தபின் நன்கு ஆற்றி சுடச்சுட குடிக்கவும். இது போல் காலை, மாலை 2வேளை 2நாட்கள் சாப்பிட்ட உடன் குணமாகும். இரும்பி, இரும்பி சிலருக்கு சிறுநீரும் தானாகவே வரும். இதை நிறுத்த ஒரு கொட்டை பாக்கை வாயில் அடக்கி அந்த துவர்ப்பு நீரை முழுங்கி பாக்கையும் சாப்பிடவும். உடனே குணமாகும்.