வர்மா ஹீரோயினுக்கு போட்டியாக ஸ்ரீதேவி மகள்

 

வர்மா ஹீரோயினுக்கு போட்டியாக ஸ்ரீதேவி மகள்

விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கில், ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கில், ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் துருவ் மற்றும் மேகா சௌத்ரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உருவான திரைப்படம் ‘வர்மா’. பாலா இயக்கிய இப்படத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்தி இல்லாததால், படத்தை கைவிட்டது. துருவ் நடிப்பில் இந்தப் படம் மீண்டும் துவங்கும் என அறிவித்திருந்தது. இதற்கு முன்பு நடித்த மற்ற நடிகர்கள் யாரையும் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் கதாநாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வியை புக் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாய் தகவல் வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிக்கும் அஜித் படத்தில் ஜான்வி அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தில் இவர் நடிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டது. எனவே விக்ரம் மகனுடன் அறிமுகம் செய்யலாம் என திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.