“வர்மாவை விஜய் தேவரகோண்டாவ வச்சே எடுத்திருக்கனும்” தயாரிப்பாளர் புலம்பல்!

 

“வர்மாவை விஜய் தேவரகோண்டாவ வச்சே எடுத்திருக்கனும்” தயாரிப்பாளர் புலம்பல்!

நாங்கள் அர்ஜுன் ரெட்டியை அப்படியே தமிழில் ரீமேக் செய்ய விரும்பினோம், ஆனால் வர்மா அப்படி வரவில்லை. தெலுங்கு வெர்சன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது, ஆனால் தமிழில் இரண்டு மணிநேரம் வந்தது. அர்ஜுனின் பாட்டி என்ற முழு கதாபாத்திரமும் படத்தில் காணவில்லை. ஆனால் வர்மா படத்தை பாலாவின் சிக்நேச்சர் டைப் என்று சிலர் சொல்லலாம்

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்த படத்தை இயக்க பாலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். தனெக்கென்று தனி அடையாளம், ஒரு திரைமொழி கொண்ட பாலா, விக்ரம் கேட்டுக்கொண்டதன் பேரில் துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை எடுத்துகொடுத்தார். ஆனால் தயாரிப்பு தரப்பில் படம் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை, அதனால் இந்த படத்தை வெளியிடப்போவதில்லை” என்று அறிவித்ததுடன் வேறொரு இயக்குனரை வைத்து படத்தை எடுத்து முடித்தனர். 

mukesh-mehta

சமீபத்தில் வர்மா படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, ஃபிலிம் கம்பானியன் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் “பாலா இயக்கிய வர்மா படத்தில் விஜய் தேவரகோண்டாவை நடிக்க வைத்திருக்கவேண்டும். “எடுத்து வைத்திருக்கும் வர்மா படத்தை எந்த OTT தளத்தில் வெளியிடலாம் என்று அவர் ஒரு வாக்கெடுப்பு நடத்தக்கூட வாய்ப்பிருக்கிறது” என்றும் மேத்தா கூறினார்

“நாங்கள் அர்ஜுன் ரெட்டியை அப்படியே தமிழில் ரீமேக் செய்ய விரும்பினோம், ஆனால் வர்மா அப்படி வரவில்லை. தெலுங்கு வெர்சன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது, ஆனால் தமிழில் இரண்டு மணிநேரம் வந்தது. அர்ஜுனின் பாட்டி என்ற முழு கதாபாத்திரமும் படத்தில் காணவில்லை. ஆனால் வர்மா படத்தை பாலாவின் சிக்நேச்சர் டைப் என்று சிலர் சொல்லலாம். நாங்கள் வர்மா படத்தை வெளியிட்டு அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் தவறு எங்கள் பக்கம் தான் என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும்” என்றார். 

varma-movie-09

வர்மா படத்தை நிராகரித்தது மேத்தாவின் முடிவாகும், மேலும் முழு படத்தையும் வேறு சில புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவுடன் மீண்டும் எடுத்து முடித்தனர். கடந்த  ஆண்டு தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் “எங்களிடம் வழங்கப்பட்ட இறுதி பதிப்பில் E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திருப்தியடையவில்லை. படத்தின் கதையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக, இந்த பதிப்பை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அதற்கு பதிலாக, நாங்கள் மீண்டும் படத்தை வேறொரு குழுவுடன் எடுக்கவுள்ளோம், அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை துருவை ஹீரோவாக வைத்து எடுத்து முடிப்போம்” என்று கூறியிருந்தனர். 

bala

இதற்கு “படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்க, இந்த படத்திலிருந்து வெளியேறியது  எனது சொந்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இதை இங்கே முடிக்க விரும்புகிறேன்” என்று பாலா பதிலளித்திருந்தார்.