வர்த்தக போர் பதற்றம் தணிந்ததால் ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 396 புள்ளிகள் உயர்ந்தது

 

வர்த்தக போர் பதற்றம் தணிந்ததால் ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 396 புள்ளிகள் உயர்ந்தது

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிந்ததால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 396 புள்ளிகள் உயர்ந்தது.

இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா-சீனா இடையே நிலவிய வந்த வர்த்தக போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

மும்பை பங்குச் சந்தை

வேதாந்தா, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், மாருதி மற்றும் எல் அண்டு டி உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும் யெஸ்பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யூனிலீவர், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,273 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,243 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம், 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.46 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் சந்தை  மதிப்பு ரூ.146.87 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 396.22 புள்ளிகள் உயர்ந்து 38,989.74 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 133.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,573.30 புள்ளிகளில் முடிவுற்றது.