வர்த்தகத்தில் முன்னோடிகளாக திகழ்ந்த தமிழர்கள்: நிர்மலா சீதாராமன் புகழாரம்

 

வர்த்தகத்தில் முன்னோடிகளாக திகழ்ந்த தமிழர்கள்: நிர்மலா சீதாராமன் புகழாரம்

தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னோடிகளாக ஒரு காலத்தில் திகழ்ந்தனர் என இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூடியுள்ளார்

சென்னை: தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னோடிகளாக ஒரு காலத்தில் திகழ்ந்தனர் என இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூடியுள்ளார்.

தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்த இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டார். அதனை முதலமைச்சர் பழனிசாமி பெற்றுக்கொண்டார்.

nirmala

மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன், உலக முதலீட்டாளர் மாநாடு ஒரு நல்ல முயற்சி. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது. திறமையான தொழிலாளர்களைக் கொண்ட முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகம் சிறந்த கல்வியின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது. தமிழகத்திற்கு அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னோடிகளாக ஒரு காலத்தில் திகழ்ந்தனர் என புகழாரம் சூடிய அமைச்சர், அதை தமிழகம் மீண்டும் நிரூபிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.