வருஷத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி லாபம் கொடுக்கு… அதை போய் விற்கபோறீங்களே…. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசுக்கு எதிர்ப்பு….

 

வருஷத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி லாபம் கொடுக்கு… அதை போய் விற்கபோறீங்களே…. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசுக்கு எதிர்ப்பு….

வருஷத்துக்கு சராசரியா ரூ.17 ஆயிரம் கோடி லாபம் கொடுக்கும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்) நிறுவனத்தின் பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.70 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை வாயிலாக கிடைக்கும வருவாய் பெரிய உதவியாக இருக்கும்.

பங்கு விற்பனை

இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விற்பனை அடுத்த நிதியாண்டுக்கு தள்ளி செல்லும் என மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகாரத்னா அதிகாரிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கூட்டமைப்பு இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

அப்போது அவர்கள் கூறியதாவது: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை வாயிலாக மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் மிகவும் லாபம் ஈட்டும் திறமையான கம்பெனி பி.பி.சி.எல். கடந்த ஆண்டுகளாக சராசரியாக அந்நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடி கொடுக்கிறது. அதனால் பி.பி.சி.எல். பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.