வரும் 27 ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் இல்லை… தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்!

வரும் 27 ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் இல்லை… தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்!

தண்ணீரை கனிம வளங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, நிலத்தடி நீரை எடுத்து விற்க உரிய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 27 ஆம் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளது. 

வாட்டி வதைத்துவிடும் கோடையாலும், மழை பொய்த்து போனதாலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சல் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மக்கள் தவித்துவருகின்றன. தண்ணீர் லாரிகளே மக்களின் தாகத்தை தீர்க்கின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அதிரடியாக வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். இது மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  27-ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 4,500 தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் கூறியுள்ளார். புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுத்தும், அதிகாரிகள் மோட்டார்களை சேதப்படுத்துவதை கண்டித்தும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக லாரிகள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அதோடு தண்ணீரை கனிம வளங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, நிலத்தடி நீரை எடுத்து விற்க உரிய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.