வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என பரவி வரும் தகவல் வதந்தி.. ‘டிச.27 தான்’ : திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு !

 

வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என பரவி வரும் தகவல் வதந்தி.. ‘டிச.27 தான்’ : திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு !

கிரகங்களின் பெயர்ச்சி பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும்  வாக்கியப்பஞ்சாங்கம் என்னும் இரண்டு முறைப்படி கணிக்கப்பட்டு வருகிறது.

சனிப்பெயர்ச்சி என்றாலே பலருக்குப் பீதி தான். சனிப்பெயர்ச்சி சிலருக்கு நல்லதைச் செய்யும், சிலருக்குக் கண்ட சனியாக மாறும். கிரகங்களின் பெயர்ச்சி பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும்  வாக்கியப்பஞ்சாங்கம் என்னும் இரண்டு முறைப்படி கணிக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு நடக்கவுள்ளது.

ttn

அதில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைய உள்ளார். ஆனால், இது எப்போது நடக்கிறது என்று மக்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதாவது,  திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் ஜனவரி 24 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. ஆனால் வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நடக்கிறது. 

ttn

திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்துக் கணிப்பவர்களுக்கு வரும் ஜனவரி 24 சனிப்பெயர்ச்சி என்றும்  வாக்கியப்பஞ்சாங்கத்தை வைத்துக் கணிப்பவர்களுக்கு வரும் டிசம்பர் 27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்றும் கூறப்படுகிறது. அது எப்படி ஒரே இரண்டு முறை சனிப்பெயர்ச்சி நடக்கும் என்று எண்ணுபவர்களுக்குத் திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ttn

புதுச்சேரி, காரைக்காலை அடுத்த  திருநள்ளாற்றில் பிரபலமான  தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிபகவானுக்குத் தனி சன்னதி இருக்கிறது. சனிப்பெயர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் நளன் அந்த குளத்தில் நீராடி சனிபகவானைத் தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சனிப்பெயர்ச்சி பற்றிப் பரவி வரும் கருத்துக்களைப் பற்றி இக்கோயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் 27 ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி என்றும் வரும் 24 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் வதந்தி என்றும் அதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.