வரும் 13 ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறப்பு!

 

வரும் 13 ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக வரும் 13ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. 

மாசி மாத பூஜைகளுக்காக வரும் 13ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மாசி மாத பூஜைகளுக்காக நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 

sabarimala

தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்துவைக்கவுள்ளார். அன்றை தினம் மற்ற சிறப்புப்பூஜைகள் எதுவும் நடைபெறாது.  பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மறுநாள் 14 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 5 நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 18 ஆம் தேதி நடை மீண்டும் அடைக்கப்படும் என சபரிமலை தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.