வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் இருக்கும்: யெச்சூரி திட்டவட்டம்!

 

வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் இருக்கும்: யெச்சூரி திட்டவட்டம்!

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை: மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ராட்சச பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ஆகியோர் இந்த பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இந்தியா முழுவதும் இருக்கும் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து வருகிறார்.

இதற்கிடையே, இன்று தமிழகம் வருகை தந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வருகின்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் இடம் பெறும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.