வரும் டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும்!

 

வரும் டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும்!

ஏழுமலையானைப் பார்க்க  நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை  புரிகின்றனர். 

ஆந்திர மாநிலத்தில்  உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  தலம்  திருப்பதி. திருப்பதி ஏழுமலையானைப் பார்க்க  நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை  புரிகின்றனர். 

thirupathi

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது.சூரிய கிரகணம் என்பதால் சுமார் 13 மணி நேரம் கோயில்  நடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் சாமி தரிசனம் துவங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ttn

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம்  17 ஆம் தேதி  சந்திரகிரகணத்தை முன்னிட்டு  திருப்பதி ஏழுமலையான் கோயில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.