வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நடத்தப்படும் – உயர்கல்வித்துறை

 

வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நடத்தப்படும் – உயர்கல்வித்துறை

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது. இதனிடையே மாணவர்களின் செமெஸ்டர் தேர்வுகளும் நடைபெறுமா நடைபெறாத என்ற குழப்பம் நிலவி வருகிறது. மதுரை காமராஜர், சென்னை பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஒத்திவைத்தன.

students

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் கல்லூரிகள் வரும் ஜூன் மாதத்தில்தான் திறக்கப்படும். திறந்தவுடன் இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி தேர்வுகள் நடத்தப்படும்” என தெரிவித்தார்.