வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை- எதிர்பார்ப்பை புஸ்வாணமாக்கிய பட்ஜெட்

 

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை- எதிர்பார்ப்பை புஸ்வாணமாக்கிய பட்ஜெட்

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தவேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிபுணர்கள் அதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கருத்து தெரிவித்து இருந்தனர். கடைசியில் நிபுணர்கள் கணிப்பே உண்மையானது.

ஆன்லைன் பரிவர்த்தனை

2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்தார். 

ரொக்க பரிவர்த்தனையை குறைக்கும் நோக்கில், வங்கி கணக்கில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். 5 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இனி கட்டணம் கிடையாது. 

இனி, ரூ.400 கோடி வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு இனி 25 சதவீதம்தான் நிறுவன வரி விதிக்கப்படும். இதுவரை ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே நிறுவன வரி 25 சதவீதம் விதிக்கப்பட்டது. அதற்கு மேல் வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு அதிக வரி பிரிவில் இடம் பெற்று இருந்தன. 

வீடு

குறைந்த விலை வீடுகளுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு செய்யப்படும். மேலும் மின்சார வாகனங்களை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வரி சலுகைகளை அறிவிக்கப்பட்டது. மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு. மின்சார வாகன கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வரி கழிவு பெறலாம்.

நேரடி வரி வருவாய் ரூ.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது போன்ற பல முக்கிய அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ளன.