வருமான வரி கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லையா? கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க….

 

வருமான வரி கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லையா? கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க….

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு கடைசி வாய்ப்பாக வரும் மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் வழங்கியுள்ளது.

நம் நாட்டில் மக்கள் தொகை சுமார் 130 கோடிக்கு மேல் உள்ளது. ஆனால் அதில் வருமான வரி செலுத்துபவர்கள் என்று பார்த்தால் மிக மிக குறைவு. மத்திய அரசு வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வரி ஏய்ப்பை தவிர்க்கவும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இனி வரும் காலங்களிலும் யாரும் தங்களது வருமானத்தை குறைத்து காட்டவோ அல்லது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமலோ இருக்க முடியாது.

வருமான வரி கணக்கு தாக்கல்

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை இதுவரை தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு வரி துறை ஒரு பொன்னான மற்றும் கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது. 2020 மார்ச் 31ம் தேதிக்குள் 2018-19ம் நிதியாண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பையும் நீங்க மிஸ் பண்ணினால், வருமான வரித்துறை நேரடியாக உங்களிடம் பழைய ஆண்டுக்கான வருமான வரி கணக்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிடும். மேலும், வருமான வரி கணக்கை தாமதாக தாக்கல் செய்வதால் தாமத கட்டணமாக ரூ.10 ஆயிரத்தையும் கூடுதலாக கட்ட வேண்டும். அதனால 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை மார்ச் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்தை தாக்கல் செய்து விடுங்க. 

அபராதம்

அப்புறம், 2018-19ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததில் சில தவறுகளை செய்து இருப்போம் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். எனவே அவர்கள் வருமான வரி கணக்கில் திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் செய்வார்கள்.