வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு- நிர்மலா சீதாராமன்

 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு- நிர்மலா சீதாராமன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 லட்சத்து 63ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார் 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தாக்கதால் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 லட்சத்து 63ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார் 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தாக்கதால் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவில் சுமார் 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னலம் பாராது 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் சாமானிய மக்கள் முதல் பல பேரின் தினசரி வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

nirmala

இந்நிலையில் டெல்லியில் இன்று பிசெய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், “வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதியே கடைசிநாளாக அறிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் வரிப்பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்படும்.டிடிஎஸ் பிடித்தம் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.” என அறிவித்தார்.