வருமான வரியில் மாற்றம் இல்லை… அதிக வரிக்கு வாய்ப்பு… கிலியை ஏற்படுத்தும் மத்திய பட்ஜெட் பற்றிய செய்திகள்!

வருமான வரியில் மாற்றம் இல்லை… அதிக வரிக்கு வாய்ப்பு… கிலியை ஏற்படுத்தும் மத்திய பட்ஜெட் பற்றிய செய்திகள்!

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் மின் சாதனம், மின்னணு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள செய்தி மக்களைக் கவலை அடைய செய்துள்ளது.

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் மின் சாதனம், மின்னணு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள செய்தி மக்களைக் கவலை அடைய செய்துள்ளது.

budget 2020

மத்திய பட்ஜெட் வருகிற 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மின்சாதனப் பொருட்கள் மீதான வரி பல மடங்கு அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த பொருட்கள் மீதான சுங்க வரி 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு 56 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவும் சுமையும் மக்கள் தலையில்தான் விழும் என்பதால் இதை அரசு யோசித்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

electrical-goods

வருமான வரியில் மாற்றம் ஏதும் இருக்காது என்றே கூறப்படுகிறது. அப்படியே இருந்தாலும், வருமான வரிக்கான வரம்பு 2.5 லட்சத்துக்கு மேல் என்பதில் மாற்றம் இருக்காது. ஆனால், 2.5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கான வரி 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.