வருமானவரி என்ற பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்! – சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

 

வருமானவரி என்ற பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்! – சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வருமான வரி என்ற வரி பயங்கரவாதம் நீக்கப்பட வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.பிரதமர், நிதி அமைச்சருக்குப் பொருளாதாரம் தெரியாது என்று எல்லாம் அதிரடியாக பேசக்கூடியவர் பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் எம்.பி-யுமான சுப்பிரமணியன் சுவாமி. குஜராத்தில் உள்ள சிந்தி பல்கலைக் கழக நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வருமான வரி என்ற வரி பயங்கரவாதம் நீக்கப்பட வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பிரதமர், நிதி அமைச்சருக்குப் பொருளாதாரம் தெரியாது என்று எல்லாம் அதிரடியாக பேசக்கூடியவர் பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் எம்.பி-யுமான சுப்பிரமணியன் சுவாமி. குஜராத்தில் உள்ள சிந்தி பல்கலைக் கழக நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
விழாவில் பேசிய சுவாமி, “மதச்சார்பின்மை என்பது ஏலியன் கொள்கை. அது இந்தியாவின் இருண்ட காலமான அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தியால் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. உலகின் வேறு எந்த ஒரு நாட்டைக் காட்டிலும் இந்தியாவில்தான் பெண்களின் நிலை சிறப்பாக இருந்தது. 

income tax

நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள் மூடப்படும் சூழல் ஏற்படும். இதனால் பேரிழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். முதலில் நாட்டிலிருந்து வருமான வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். வரி பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மூட வேண்டும். அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களை பிற மத்திய அரசு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றலாம். ஜவஹர்லால் நேரு, டெல்லி பல்கலைக் கழகம் உள்ளிட்ட எல்லா பல்கலைக் கழகங்களிலும் போலீசாரை நிறுத்த வேண்டும். மத்திய ரிசர்வ் படை போலீசாரையும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களையும் கூட பாதுகாப்புக்காக நிறுத்தலாம். அமெரிக்காவில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி போலீசார் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அதுபோல, இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் போலீசார் நிறுத்தப்பட வேண்டும்.
வரலாற்றுத் தவறுகளை சரி செய்யும் விதத்தில் சரியான நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் எந்த ஒரு குடிமகனின் குடியுரிமையையும் பறிக்காது. நமது குறிப்பிட்ட சில அண்டை நாடுகளில் மத ரீதியாக தாக்குதலுக்கு ஆளாகி இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமையை வழங்கக்கூடியது மட்டுமே” என்றார்.