வருகிறான்… அத்தி வரதன் காஞ்சிபுரத்தில் இப்போதே பரபரப்பு!

 

வருகிறான்… அத்தி வரதன் காஞ்சிபுரத்தில் இப்போதே பரபரப்பு!

 அவன் வரப்போவது ஜூலை ஒன்றாம் தேதிதான்.ஆனால் இப்போதே காஞ்சிபுரம் நகராட்சியும்,மாவட்ட நிர்வாகமும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னேற்பாட்டில் இறங்கிவிட்டன.சும்மாவா 40 ஆண்டுகள் கழித்தல்லவா வருகிறான் வரதன்

அவன் வரப்போவது ஜூலை ஒன்றாம் தேதிதான்.ஆனால் இப்போதே காஞ்சிபுரம் நகராட்சியும்,மாவட்ட நிர்வாகமும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னேற்பாட்டில் இறங்கிவிட்டன.சும்மாவா 40 ஆண்டுகள் கழித்தல்லவா வருகிறான் வரதன்

காஞ்சியில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வரதராஜபெருமாள் கோவில் அமைந்திருக்கிறது.அங்கே வரும் ஜூலை ஒன்றாம் தேதி ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது.கோவிலின் உள்ளே இருக்கும் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தெற்கில் உள்ள நீராழி மண்டபத்துக்கு கீழே இன்னொரு மண்டபம் இருக்கிறது. 

அந்த குளத்துக்கு ஆனந்த புஷ்கரணி,அமிர்தசரஸ் என்றெல்லாம் பெயர்களுண்டு.அதன் நீருக்கடியில் வெள்ளித் தகடுகள் பாவிய பெட்டிக்குள் இருக்கிறான் வரதன்.அந்த சிலை அத்திமரத்தால் செய்யப்பட்டது என்பதால்.அத்திவரதர்.

அத்தி வரதன்

1979ம் ஆண்டு உற்சவத்துக்குப் பிறகு நீருக்குள் வைக்கப்பட்ட  வரதனை வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைப்பர்.வரதர் நின்ற கோலத்திலும் கிடந்த கோலத்திலும் 48 நாட்கள் சேவை சாதிப்பார்.கும்பகோணம் மகாமக விழாவைப்போல நாற்பதாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவிற்கு உலகம் முழுவதுமுள்ள வைணவ பக்த்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

அப்படி வரும் பக்த்தர்களுக்கு தங்குமிடம்,கழிப்பிட வசதி ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை செய்வதில் கோவில் நிர்வாகம்,மாவட்ட நிர்வாகம் ஆகியோர் இப்போதே இறங்கிவிட்டார்கள்.ஆனால்,லட்சக்கணக்கான மக்கள் கூடப்போகும் இந்த விழாவை சிறப்பாக நடத்துவதில் தமிழக அரசும் ,சுற்றுலாத்துறையும் சரியான ஈடுபாடு காட்டுவதில்லை என்ற குறை காஞ்சி மக்களுக்கு இருக்கிறது.