வராகியை வழிபட்டு அவள் அருளாட்சி உங்களுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

 

வராகியை வழிபட்டு அவள் அருளாட்சி உங்களுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

வராகி அம்மனை எவ்வாறு எல்லாம் வழிபட வேண்டும் என்று இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்

நம்மை காத்து ரட்சிக்கும், வராகியை நாமும் வணங்கி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருசில விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

உங்கள் வெற்றியை உங்கள் கரத்தில் கொடுத்து நீங்கள் மகிழும் முகத்தை பார்த்து தன்னை வேண்டி வந்தவன் மகிழ்வோடு இருக்கிறான் என ஆனந்த நடனமிட்டு கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவாள்  அன்னை வாராகி. 

varaagiyhj

நமக்கு தெரிந்ததெல்லாம் அவள் உக்ரமானவள், ஆவேசமிகுந்தவள் என்று தான். ஆனால் அது அப்படி அல்ல. தன்னை மறவாமல் சிந்திக்கும் பக்தனோடு கொஞ்சி விளையாடும் குழந்தை அன்னை வராகி.

இவள் அன்புக்கு அழகாய் அடிபணிந்து தன் பக்தனை அனைத்து மகிழ்பவள் வராகி தேவி ஆவார். வாராகி என்றாலே பயத்தை போக்கி அவள் அபயகரம் நம்மை காத்து ரட்சிக்கும், இந்த மாபெரும் சக்தியை வணங்கி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒரு சில விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

வராகியை வணங்கும் முறைகள் : 

வராகி அன்னை தூய்மையான அன்புக்கும், பக்திக்கும் வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள். இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ இவையெல்லாம் இல்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான். அது போதும் அவள் வந்து அமர்ந்து அருள்புரிய.

varaagifghh

வாராகி அன்னை அருளை பெற முக்கிய விதி புறம்பேச கூடாது. மற்றவர் படும் துயரம் கண்டு நாம் அதில் குளிர்காய கூடாது. இந்த எதிர்மறை எண்ணம் இருந்தால் அன்னை அருள் நம்மை என்றைக்கும் நெருங்காது. ஆயிரம் மந்திரங்கள் லட்ச எந்திரமும் வைத்திருந்தாலும் அன்னையின்  பார்வை நம்மீது படாது.

வராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்களது வலிமையை குறைக்கும்.

எனக்கு இது வேண்டும் தாயே கொடு என கேட்கலாம். ஆனால் வேறொருவரை கெடு என்று இந்த தேவியிடம் வேண்டக்கூடாது. ஏனெனில் கண்ணிமைபோல் காக்கும் அன்னைக்கு நம் சத்ருபத்தி தெரியாமலா போய்விடும். நமக்கு தீங்கு செய்பவர்களை அவள் பார்த்து கொள்வாள்.

varagifghj

வாராகி அருள் நமக்கு இருக்கிறது என்ற கர்வமும், அதனால் மற்றவர்களிடம் தன்னை பற்றி பெருமித பேச்சு இருக்கவே கூடாது.

மனத்தில் பொய், வஞ்சம், இதெல்லாம் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் வாராகி அதில் உடனே அமர்ந்து அருள்புரிவாள்.
 
நெறி எனும் முக்கிய விதியை யார் கடைபிடிக்கின்றார்களோ. அவர்களிடத்தில் பிரியம் கொண்டு அன்போடு அருளாட்சி செய்பவள் தான் இந்த வாராகி அன்னை. என்றைக்கும் ஒவ்வொருவர் எண்ணங்கள் பார்த்து வருபவள் தான் இவள். நன்மை எனில் நல் வாழ்வும், அதர்மம் எனில் தண்டனை வாழ்வும் வழங்குபவள் வராகி ஆவாள்.