வரவர மாமியார் கழுத போல தேய்ஞ்சாலாம்; இது என்னடா காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை!

 

வரவர மாமியார் கழுத போல தேய்ஞ்சாலாம்; இது என்னடா காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை!

பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அப்போதெல்லாம் சொற்ப இடங்களில் போட்டியிட்டு, மிகவும் குறைவான எம்.பி.,-க்களையே பாஜக தன் வசம் வைத்திருந்தது

நம்மூரில் ஒரு பழமொழி கூறுவார்கள்..வரவர மாமியார் கழுத போல ஆனாளாம் என்று. தன்னுடைய மாமியாரை கொடுமைப்படுத்திய பெண் ஒருவர், அவரை வீட்டை விட்டு துரத்த தேவதையின் வரம் பெற்று இளமை பொங்கும் அழகுடனும், ஏராளமான தங்கத்துடனும் அவர் மீண்டும் வீடு வந்து சேருகிறார். இதனால், தன்னுடைய அம்மாவையும் அப்படி ஆக்கும் பொருட்டு அதேபோன்று அப்பெண் அனுப்ப, தேவதையிடம் வீடு போய் சேரும் முன் கழுதையாக மாறி விடுவாய் என்ற சாபம் வாங்கி வருகிறார் அவர். இதனை கண்ட ஊர் மக்கள் அப்பெண்ணின் கணவரிடம் “வர வர மாமியார் கழுத போல ஆனாளாம்” என கூறுவது போன்றது அந்த பழமொழி.

rahul gandhi

இந்த பழமொழி எதற்கு பொருந்துதோ இல்லையோ, தற்போது காங்கிரஸ் கட்சிக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ், பல்வேறு மாநிலங்களில் தனது கொடியை பறக்கவிட்டது. பெரும்பாலான மாநிலங்களில் அந்த கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அப்போதெல்லாம் சொற்ப இடங்களில் போட்டியிட்டு, மிகவும் குறைவான எம்.பி.,-க்களையே பாஜக தன் வசம் வைத்திருந்தது.

ஆனால், கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில், காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படு தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

Vajpayee

ஏற்கனவே வாஜ்பாய் தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்திருந்தாலும், கடந்த தேர்தலில் அக்கட்சி பெற்றது தான் மிகப்பெரிய வெற்றி. அதில், பாஜக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் 38.5. பாஜக மட்டும் பெற்ற வாக்கு சதவீதம் 31.0. அப்படி பார்த்தால், சுதந்திரத்துக்கு பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் குறைவான வாக்கு சதவீதம் பெற்ற கட்சி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது அதுவே முதல் முறை.

ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 464 தொகுதிகளிலும், பாஜக 428 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதேபோல், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 440 தொகுதியிலும், பாஜக 433 தொகுதியிலும் போட்டியிட்டது. 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதியிலும், பாஜக 364 தொகுதியிலும் போட்டியிட்டது.

modi

இந்நிலையில், ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நடப்பு மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக-வும், விட்ட கோட்டையை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக மெகா கூட்டணியை இரு கட்சிகளும் அமைத்துள்ளன. இருப்பினும், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 423 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் இரு தொகுதிகளுக்கு மட்டும் தான் அக்கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், பாஜக-வோ இதுவரை 437 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அந்த இரு தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தாலும், அக்கட்சியால் பாஜக-வின் எண்ணிக்கையை தாண்ட முடியாது.

bjp congress

பாஜக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் மட்டுமே என்பதால், கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு சமரசங்களை காங்கிரஸ் செய்து கொண்டாலும், பாஜக-வை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது அக்கட்சியின் சோதனை காலமாகவே பார்க்கப்படுகிறது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் ஆகும்.

இதையும் வாசிங்க

மாட்டு கோமியம் புற்றுநோயை குணப்படுத்தும்: புது கண்டுபிடிப்பை வெளியிட்ட பா.ஜ.க வேட்பாளர்