வரலாற்று சிறப்புமிக்க அர்த்த கும்பமேளா ஜனவரி 15ல் தொடக்கம் 

 

வரலாற்று சிறப்புமிக்க அர்த்த கும்பமேளா ஜனவரி 15ல் தொடக்கம் 

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா வரும் ஜனவரி 15 ஆம் தேதி தொடக்கம் .

அலகாபாத் : 

பாற்கடலைக் கடைந்த பொழுது அமுத கலசத்திலிருந்து நான்கு துளி அமுதம் அலகாபாத் தற்போதைய பிரயாக்ராஜ் ,நாசிக், உஜ்ஜயினி, ஹரித்வார் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

kumbamela

அமுதம் விழுந்த நாளில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடத்தப்படுவது வழக்கம். பிரசித்திபெற்ற அலகாபாத்தில் நடைபெறும் மகாகும்பமேளா அதிக சிறப்பு வாய்ந்தது ஆகும்.

அதே போல் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா விழாவும் அங்கு விமர்சையாக நடைபெறும். புனித நதிகளில் குளிக்கும் போது பழைய பாவங்கள் அழிக்கப்படுவதுடன் பிறந்ததற்கான பலனும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். 

இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அர்த்த கும்பமேளா தொடங்க உள்ளது. இது தொடர்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தின் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்பொழுது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

kumbamela

கும்பமேளா என்பது நமது நாட்டின் பாரம்பரியத்தை உலகுக்கு பறைசாற்றும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி என்றும் 15 ஆம் தேதி மகர சங்கராந்தி பூஜையுடன் கும்பமேளா விழா தொடங்கி மார்ச் 4 ஆம் தேதியான மகாசிவராத்திரி அன்று வரை நடைபெறுவதாகவும் .

இந்த கும்பமேளாவில் 16 முதல் 20 லட்சம் பக்தர்கள் மற்றும் சாதுக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் இது தவிர அடிப்படை வசதிகளும் சுற்றுலாத்துறையின் சார்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும். 

kumbamela

உத்திரப்பிரதேச மாநில அரசின் சார்பில் இந்த மகா கும்பமேளாவிற்கு ரூ.4,300 கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து உத்திரபிரதேசத்துக்கு ரெயில்களில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகளும் சிறப்பு தகவல் மையங்களும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .