வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!  

 

வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!  

வரலாறு காணாத அளவிற்குத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

சென்னை: வரலாறு காணாத அளவிற்குத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வைத்தே அடிப்படையாக மதிப்பிடப்படுகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலை குடிகொண்டே செல்கிறது. உதாரணமாக  ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தொட்டது. பின்பு ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தையும் தாண்டியது. தற்போது ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நேற்றைய நிலவரம் படி சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.27,680-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 568 உயர்ந்து 28,352க்கு விற்கப்படுகிறது. மேலும் தங்கம் இதுவரை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

gold

வெள்ளி ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.45.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சர்வதேச நிலவரப்படி தங்கம் விலை தொடர்ந்து  உயர்ந்து பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .