வரம் தரும் எட்டு வகை கிருஷ்ணர்கள்! | ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

வரம் தரும் எட்டு வகை கிருஷ்ணர்கள்! | ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

ஸ்ரீ கிருஷ்ணரின் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு விளக்கங்கள் உண்டு. பக்தர்கள், ஸ்ரீகிருஷ்ணனை எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கி வருகிறார்கள். 
1. தாய் யசோதையின் மடியிலே அமர்ந்த கோலத்தில் இருக்கும் கிருஷ்ணரை சந்தான கோபால கிருஷ்ணன் என்று வழிபடுகிறார்கள்.

2. கிருஷ்ணர் பாலகனாக தவழ்ந்து வருகிற கோலத்தை பாலகிருஷ்ணன் என்றழைக்கிறார்கள். ஆலயங்களிலும், பலரது வீட்டின் பூஜை அறையிலும் பெரும்பாலும் இந்த கிருஷ்ணரைக் காணலாம்.
3. காளிங்கன் எனும் நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் கிருஷ்ணரை காளிய கிருஷ்ணன் என்றழைத்து வழிபடுகிறார்கள்.
4. கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலத்தில் இருப்பதை கோவர்த்தனதாரி என்றழைக்கிறார்கள்.

5. வலது காலை சிறிது மடித்து, இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணனை வேணுகோபாலன் என்று அழைத்து வழிபடுகிறார்கள். ராதையுடன் கிருஷ்ணன் நின்றிருக்கும் வடிவத்தை வழிபட்டு வந்தால், தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும்.
6. கிருஷ்ணர், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலத்தை முரளீதரன் என்கிறோம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ரூபமாக கருதப்படுகிறது.
7. அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணனை மதன கோபாலன் என்று வழிபடுகிறோம்.
8. அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிக்கும் கிருஷ்ணனின் திருக்கோலத்தை பார்த்தசாரதி என்று வழிபடுகிறோம். அகிலத்தைக் காப்பவன் இந்த வடிவம். நமது எதிரிகளின் தொல்லைகளை சமாளிக்கும் திடத்தையும், மன  உறுதியையும் தரும் வல்லமை பார்த்தசாரதியை வழிபடும் போது கிடைக்கிறது.