வரப்பு உயர நெல் உயரும்; ஆவின் விலை உயர டீ விலையும் உயரும்

 

வரப்பு உயர நெல் உயரும்; ஆவின் விலை உயர டீ விலையும் உயரும்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் டீ-காபி விலை இன்று முதல் ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படுகிறது. மதுரை நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு கப் டீ, காபி ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் டீ-காபி விலை இன்று முதல் ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படுகிறது.  மதுரை நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு கப் டீ, காபி ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் இதன் விலை ரூ.14 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. கிராமப்புறந்களில் ரூ.5, ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ, காபி முறையே ரூ.7, ரூ.9 என அதிகரிக்கப்பட இருக்கிறது. அதேபோல், பார்சல் டீ, காபி விலையும் அதிகரித்துள்ளது. ஓட்டல்களில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ, காபியின் விலை ரூ.22 முதல் ரூ.28 வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.

Tea shops raise too

காபி-டீ வர்த்தக சங்க கவுரவ செயலாளர் சுகுமாறன் விலை உயர்வு பற்றி கூறும்போது “மதுரை மாநகரில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட காபி-டீ கடைகள் உள்ளன. ஏற்கனவே தனியார் பால் விலை அதிகரித்து விட்டது. தற்போது ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்திவிட்டனர். இந்த உயர்வால் நாங்களும் விலையேற்றம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உதாரணமாக ஒரு கடையில் 100 லிட்டர் பால் வாங்கினால், லிட்டருக்கு ரூ.6 அதிகம் என்ற அடிப்படையில் கூடுதலாக ரூ.600 செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய சுமை. எனவே இன்று முதல் ஒவ்வொரு கப் காபி-டீ விலை குறைந்தது 2 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்” என்றார்.