வரகரிசி எழுமிச்சை சாதம்… இவ்வளவு சத்தானதா..!

வரகரிசி எழுமிச்சை சாதம்… இவ்வளவு சத்தானதா..!

சிறுதானியங்களில் சமையல் செய்தால் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் காரணங்கள் தான். குழந்தைகளை நாம் தான் சத்தான உணவு வகைகளைச் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நீங்களும் ஒதுக்கி வைத்தால், எப்பொழுதுமே அவர்களின் அடிமனதில், இவையெல்லாம் பிடிக்காது என்று ஒரு பட்டியலைப் போட்டு வைப்பார்கள்.

சிறுதானியங்களைப் பயன்படுத்தி சமையல் செய்யும் பொழுது அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் ஏதாவது கூடவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக சிறுதானியங்களில் சமைக்கப்படுகிற வெரைட்டிகளின் சுவை, அவர்களை மேலும் சிறுதானிய சமையலைக் கேட்கும் படி தூண்டும்.

lemon rice

வரகரிசி எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள்
வரகரிசி-1/2கப்
எலுமிச்சை பழம்-1பெரியது
கடலை பருப்பு-1டீஸ்பூன்
உளுந்து -1டீஸ்பூன்
முந்திரி பருப்பு-10
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/4டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
இஞ்சி-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-10 இலைகள்
தண்ணீர்-ஒன்றரை கப்
எண்ணெய்-2 டீஸ்பூன்
உப்பு –தேவையான அளவு

rice

செய்முறை
வரகரிசியை 15 நிமிடம் நல்ல தண்ணீரில் ஊறவைத்து, அதன் பிறகு நன்கு கழுவவும். குக்கர் அல்லது அடிகனமான பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவிய வரகரிசியை போடவும். மீண்டும் கொதி வரத்தொடங்கியதும் தணலைக் குறைத்து மூடி போட்டு வேக விடவும். 10-15 நிமிடத்தில் வரகரிசி சாதம் தயாராகிவிடும்
வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, கடலைபருப்பு , சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, முந்திரி போட்டு வதக்கியதும் ஒரு முழு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து விடவும். 2 நிமிடம் மூடிவைத்தபின் எலுமிச்சை கலவையை வேகவைத்துள்ள வரகரிசி சாதத்தில் ஊற்றி கிளறவும். இத்துடன் தேவையான உப்பு சேர்க்கவேண்டும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வரகரிசி எலுமிச்சை சாதம் தயார்.

வழக்கமான அரிசியோடு ஒப்பிடும் போது வரகரிசியிலே நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நல்ல உணவாக இருக்கும். பொதுவாக சிறுதானிய சமையல் செய்யும் பொழுது மண் பாத்திரங்களைப் பயன்படுத்தி சமைத்தால், சிறுதானியங்களில் முழு சத்தும் கிடைக்கும்.