வயிற்றில் வளர்வது ஆணா…பெண்ணா? நம் முன்னோர்கள் சொன்ன அறிகுறிகள்

 

வயிற்றில் வளர்வது ஆணா…பெண்ணா? நம் முன்னோர்கள் சொன்ன அறிகுறிகள்

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால், பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றமாகும். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா…பெண்ணா என்பதை அறிய நம்முடைய முன்னோர்கள் சில அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கூறியபடியே பல பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கீழ்வருமாறு:

✷கர்ப்பிணிகளுக்கு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும்.

✷முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

✷காலைவேளையில் வாந்தி அல்லது குமட்டல் அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கும்.

✷கர்ப்பகாலத்தில் பெண்களின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.

✷கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருத்தல் வேண்டும்.

✷பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும்.

✷கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வலது மார்பகம் பெரியதாகும்.

ஒருவேளை வயிற்றில் வளர்வது பெண் குழந்தையாக இருந்தால், மேற்கண்ட அறிகுறிகளுக்கு நேர் எதிர்மறையான அறிகுறிகள் தோன்றும்.