வயநாடு பயணத்தை ரத்து செய்த ராகுல்… மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு!

 

வயநாடு பயணத்தை ரத்து செய்த ராகுல்… மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டது கேரளாவில்தான். தற்போது மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் பாஸிடிவ் நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். இதனால், அங்கு மிகக் கடுமையான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வயநாடு மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றப் பயணத்தை ரத்து செய்துள்ள ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிராக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டது கேரளாவில்தான். தற்போது மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் பாஸிடிவ் நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். இதனால், அங்கு மிகக் கடுமையான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் வயநாடு எம்.பி-யான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர் பணியாளர்களைப் பாராட்டி கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சுகாதார நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். வயநாடு தொகுதிக்கு செல்ல வேண்டுமென்று திட்டமிடப்பட்ட என்னுடைய பயணத்தை ஒத்திவைத்துள்ளேன். ஆனால், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வயநாடு கலெக்டர் அடீலா அப்துல்லாவிடம் பேசினேன்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளவும், மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நிலைமை மேம்படும் வரை நமது மக்கள் அனைவரும் தங்கள் அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து மற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பொது பாதுகாப்பு உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இவை மிகவும் அவசியமானவை. இந்த வைரஸ் நோய்த் தொற்றுக்கு சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய நாடுகள் இன்று மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
வயநாட்டில் கண்காணிப்பில் உள்ளவர்கள் விரைவில் நலம் பெற்றுத் திரும்பி வர வாழ்த்துகிறேன். இதற்காக பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் கடுமையான உழைப்புக்கு நன்றி கூறுகிறேன். 
உலகின் தொடர்பு மிகப் பெரிய அளவில் இணைக்கப்பட்டு வரும் இக்கால கட்டத்தில், நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் கூட்டுப் பொறுப்பு நமக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.