வயநாடு தொகுதி: சகோதரியுடன் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி

 

வயநாடு தொகுதி:  சகோதரியுடன் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

வயநாடு : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல்

ec

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

வயநாடு தொகுதியில்  ராகுல் 

rahul

அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவது ஏற்கனவே முடிவான நிலையில், அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். 

வேட்புமனு தாக்கல் 

 

இந்நிலையில்  ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். கேரளா மாநிலம் வயநாடுக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் அம்மாநிலத்தில் ராகுல் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

கேரளாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான  வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள்  என்பதால், ராகுல்  தனது  சகோதரி பிரியங்காவுடன்  வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மண் சாண்டி,ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் உடனிருந்தனர்.

ராகுல் போட்டியிடும் வயநாடு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் துஷார் வெல்லப் பள்ளியும், சுயேட்சை வேட்பாளராக சரிதா நாயரும்  போட்டியிடவுள்ளனர். முன்னதாக ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது வயநாடு தொகுதியில் களம் காணவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: நயன்தாரா நடிச்சால் நடிக்கிறேன்,அடம் பிடித்த சிவகார்த்திகேயன்! மிஸ்டர் லோக்கலின் சீக்ரெட்!?