வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம்: ‘டிரான்ஸ்லேஷன்’ தங்கபாலுவுக்கு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்!

 

வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம்: ‘டிரான்ஸ்லேஷன்’ தங்கபாலுவுக்கு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்!

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக, கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். 

வயநாடு: ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக, கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். 

rahul

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவது ஏற்கனவே முடிவான நிலையில், அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், வயநாடுக்கு வருகை தந்த ராகுல் காந்தி சகோதரி பிரியங்காவுடன்  வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மண் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் உடனிருந்தனர்.

thangabalu

இந்நிலையில், ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவை நியமனம் செய்துள்ளனர். முன்னதாக நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசிய ஆங்கில உரையை,  கே.வி.தங்கபாலு மொழிபெயர்த்தார். அப்போது, ராகுல் பேசியது ஒன்றாகவும், தங்கபாலு மொழிபெயர்த்தது வேறொன்றாகவும் பல இடங்களில் அமைந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. 

congress

அந்த வகையில் தற்போது வயநாடு தொகுதியில், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.வி.தங்கபாலு நாகர்கோவிலில் உளறியது போல வயநாட்டிலும் உளறாமல் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என்று சமூகவலைதளவாசிகள்  சிலர் கருத்து கூறி வருகின்றனர். 

 

இதையும் வாசிக்க: தன்னை காண வந்த பாட்டியை குஷிப்படுத்திய தோனி: வியக்க வைக்கும் வீடியோ!