வயகரா அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? உங்க கண்ண பத்திரமா பாத்துக்கோங்க..!

வயகரா அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? உங்க கண்ண பத்திரமா பாத்துக்கோங்க..!

செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க எடுத்துக் கொள்ளும் வயகரா மாத்திரையை அதிகளவில் பயன்படுத்துவதனால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க எடுத்துக் கொள்ளும் வயகரா மாத்திரையை அதிகளவில் பயன்படுத்துவதனால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. வயகரா மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் கண் பாதிப்பு ஏற்படுவதுடன் கண் பார்வை பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

viagara

வயகரா மாத்திரையில்சில்டெனாபில்என்ற மூலக்கூறில் உள்ள என்சைம் ரெட்டினாவில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது. அதுவே, கண்பார்வை பாதிப்புக்கும் பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சில்டெனாபில் ரெட்டினாவில் நிரந்தரமாக தங்கி செல்களை செயலிழக்கச் செய்து பார்வை திறனை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதுடன் முழுவதும் பறிபோகவும் செய்யும். இதனை ஆரோக்கியமாக இருந்த எலியிடம் சோதனை செய்து பார்த்ததில், வயகரா மாத்திரை கொடுத்த 2 நாட்களில் அவற்றின் கண் பார்வை பாதிக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

viagara

பெண்ணுடன் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க நினைத்து வயகரா மாத்திரையை அடிக்கடி எடுத்துக் கொண்டால் கண் பார்வையே பறிப்போகும் அபாயம் இருப்பதை ஆண்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.