‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதானவர்களை வீட்டிலேயே விட்டுவரவும்…ரஜினியை கலாய்த்த உதயநிதி

 

மிகவும் வேதனை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது  ஏற்பட்ட வன்முறையால்,  மங்களூரில் ஒருவரும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேரும் பலியாகியுள்ளனர்.

ttn

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டிவிட்டர்  பக்கத்தில்,  ‘எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!’ என்றார்.

 

இதேபோல்  உதயநிதி ஸ்டாலின்,’ தலைவர் ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்’ என்று பதிவிட்டுள்ளார்.