வன்முறையில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க தொடங்கிய போலீஸ்! டெல்லியில் போலீசார் கொடி அணி வகுப்பு….

 

வன்முறையில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க தொடங்கிய போலீஸ்! டெல்லியில் போலீசார் கொடி அணி வகுப்பு….

டெல்லியில் வன்முறை நிகழ்ந்த பகுதியில் நேற்று போலீசாரும், துணை ராணுவ படையினரும் கொடி அணி வகுப்பு நடத்தினர். மேலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக, உத்தர பிரதேசம், டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. மேலும் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தின் போது கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் கொடி அணி வகுப்பு நடத்தினர். அதேவேளையில் பீம் ஆர்மி தலைவா் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்பட்டார். 

சந்திரசேகர் ஆசாத்

கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சந்திரசேகர் ஆசாத் கலந்து கொண்டார். இதனால் நேற்று  ஜமா மசூதியை விட்டு வெளியே வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் நீதிமன்றம் அவரை 14 நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா கேட் பகுதியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.