வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது: ரஜினிகாந்த் ட்வீட்!

 

வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது: ரஜினிகாந்த் ட்வீட்!

இந்த போராட்டத்தின் போது  ஏற்பட்ட வன்முறையால்,  மங்களூரில் ஒருவரும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேரும் பலியாகியுள்ளனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ttn

டெல்லி, கர்நாடகா, பெங்களூர், உத்தரப்பிரதேசம், ஐதராபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் பதற்றத்தைத்  தவிர்க்கும் வகையில் டெல்லியில் செல்போன் சேவை முடக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது  ஏற்பட்ட வன்முறையால்,  மங்களூரில் ஒருவரும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டிவிட்டர்  பக்கத்தில்,  ‘எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.